வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (06:58 IST)

தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல பாடலாசிரியர்! அவரே வெளியிட்ட அப்டேட்!

லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் சில தினங்களுக்கு முன்னர் பூஜை வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்காக யுவன் இசையில் ஒரு பாடலை எழுத உள்ளதாக பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்க்காக செல்பிபுள்ள, அஸ்க்லஸ்க்கா மற்றும் கூகுள் கூகுள் உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.