வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (06:08 IST)

'மாநாடு’ இன்று ரிலீஸா? இல்லையா? 5 மணி காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி!

சிம்பு நடித்த 'மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்ததால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
இருப்பினும் 'மாநாடு’ படத்தின் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக இன்று திட்டமிட்டபடி 'மாநாடு’ ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது
 
இதனையடுத்து இன்று அதிகாலையில் திரையரங்குகளில் சிம்பு ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை ரிலீசாக இருந்த 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் இன்று 'மாநாடு’ படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.