செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:18 IST)

இன்றும் என்றும் இனிய நண்பர் – ரஜினியின் விருதுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகில் சாதனை புரிந்ததற்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘இன்றும் என்றும் இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்!’ என கூறியுள்ளார்.