வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (17:35 IST)

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் படங்கள் உள்பட பல்வேறு திரைப்படங்களுக்கு அவர் பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ள பிறைசூடன் சற்று முன்னர் சென்னையில் காலமானதை அடுத்து அவருக்கு ஆழ்ந்த இரங்கலை திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர் 
 
பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் சிறை என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார் என்பதும், கடைசியாக ஜெயிக்கிற குதிரை என்ற திரைப்படத்திற்கு அவர் 2017 ஆம் ஆண்டு பாடல்கள் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது