Widgets Magazine

2.o உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு? லைகா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

Last Modified வியாழன், 6 டிசம்பர் 2018 (10:32 IST)
கலெக்‌ஷன் நிலவரம் குறித்து லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த '2.0' திரைப்படம் கடந்த 29ந் தேதி உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது டிவிட்டர் பக்கத்தில் 2.o ரூ. 500 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது என குறிப்பிட்டிருக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு பெரிய படம் எதும் வெளியாக வாய்ப்பில்லை. ஆகவே இப்படம் இன்னும் பல கோடிகளை வசூல் செய்வதில் எந்த சந்தேகமும் இல்லை.

 


இதில் மேலும் படிக்கவும் :