திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (14:28 IST)

அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் உரிமை: லைகாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thunivu
அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
வாரிசு திரைப்படம் அதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதால் ‘துணிவு’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்தால் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் ‘துணிவு’ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Edited by Mahendran
 
ஏற்கனவே லைகா நிறுவனம் அஜித்தின் தனது அடுத்த படமான ’ஏகே 62 என்ற படத்தை தயாரிக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பு அஜித் நடித்த ‘துணிவு’ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran