காஜல் அகர்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்
‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘குயின்’. விகாஸ் பால் இயக்கிய இந்தப் படம், 2014ஆம் ஆண்டு வெளியானது. ராஜ்குமார் ராவ், லிசா ஹைடன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். வெறும் 12.5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 108 கோடிகளை வசூலித்துக் கொடுத்தது.
இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நடிகை ரேவதி இயக்குவதாகவும், கங்கனா கேரக்டரில் தமன்னா நடிப்பதாகவும் இருந்தது. ஆனால், அது இழுத்துக்கொண்டே போக… தற்போது தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கப் போகிறார் ரமேஷ் அரவிந்த். கங்கனா கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க, லிசா கேரக்டரில் நடிக்கிறார் எமி ஜாக்சன்.