புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (18:03 IST)

பா.ரஞ்சித் தயாரித்த "மாட்டுக்கறி சமையல்" வைரலாகும் வீடியோ!

2012ம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அந்தப்  படத்தின் வெற்றியைத்  தொடர்ந்து 'மெட்ராஸ்' திரைப்படத்தினை இயக்கினார். அந்தப்  படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினைத்  தொடர்ந்து இந்தியாவின் உச்ச நட்சத்திரத்திரங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக தென்பட்டார். 


 
தமிழ் சினிமாவில் அச்சமின்றி பல கருத்துக்களை மிகவும் ஆழமாகவும்,  அழுத்தமாகவும் ஆணியடித்தாற்போல் தன் படத்தின் மூலம் புரியவைக்கும் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில்  ராஜேஷ் ராஜாமணி இயக்கத்தில் வெளியாகி உள்ளது  ‘மதிய நேர காதல் (Lovers in afternoon)’ குறும்படம். இந்த படத்தில் ராதிகா பிரசித்தா மற்றும் ரெஜின் ரோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 
இதில் தம்பதியர் கருத்து வேறுபாட்டால் சண்டையிடுகின்றனர். பிறகு மனைவியை சமாதானப்படுத்த கணவன்  வெளியே சென்று மாட்டுக்கறி வாங்கி வந்து  அதனை அவரே சமைத்து மனைவிக்கு பரிமாற அந்த பெண் அவர் சமைத்த மாட்டுக்கறி சமையலை சாப்பிட்டு சமாதானமாகிவிடுகிறாள். கடைசியாக # VoteOutHate என போடப்பட்டுள்ளது. அதாவது மக்களை வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி இந்த குறும்படம் முடிக்கப்படுகிறது.