வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: சனி, 6 மே 2017 (12:11 IST)

6 வயசுல இருந்தே காதலிக்கிறாராம் டாப்ஸி…

6 வயதில் இருந்தே தான் காதலித்து வருவதை வெளிப்படையாகக் கூறியுள்ளார் டாப்ஸி.

 
 
‘ஆடுகளம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. அதற்குப் பிறகு ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா-2’, ‘வை ராஜா  வை’ படங்களில் நடித்தவருக்கு, தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. ஓவர் வெள்ளையாக இருந்ததாலோ என்னவோ, அவரை  ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால், ஹிந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. சமீபத்தில் கூட அவர்  நடித்த ‘ஷபானா’ ஹிந்திப் படம் ரிலீஸானது. 
 
இந்நிலையில், அவரிடம் முதல் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “நான் 6 வயதில் இருந்தே காதலித்து வருகிறேன்.  அதுதான் என்னுடைய முதல் காதல். இப்போதும் அந்தக் காதல் தொடர்கிறது. நடனம்தான் அது” என வழக்கமாக நடிகைகள்  சொல்லும் பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் டாப்ஸி.