புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (09:24 IST)

சேரனின் சமாதான நாடகம் வீண்: நாமினேட் செய்த லாஸ்லியா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சேரன் ஒவ்வொரு வாரமும் தான் நாமினேட் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து வந்தார் என்பது அவரது முந்தைய நடவடிக்கைகளில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று நாமினேஷன் படலம் இருக்கும் நிலையில், நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக லாஸ்லியாவுடன் நேற்று இரவு அவர் ஒரு சமாதான நாடகத்தை நடத்தினார் 
 
கடந்த இரண்டு வாரங்களாக லாஸ்லியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வந்த சேரன், லாஸ்லியா குறித்து மற்றவர்களிடம் விமர்சனம் செய்து வந்த சேரன், இன்று அவரை லாஸ்லியா நாமினேட் செய்யக் கூடாது என்பதற்காக நேற்று இரவு மீண்டும் ஒரு 'அப்பா' நாடகத்தை நடத்தினார். ஆனால் இந்த நாடகத்தில் மயங்காத லாஸ்லியா இன்று சேரனை நாமினேட் செய்தார். சேரனால்தான் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஒரு சில விஷயங்களில் அவர் தன்னை கண்டு கொள்ளாமல் தனக்கு எதிராக முடிவெடுத்ததாகவும், அதனால் அவரை நாமினேட் செய்வதாகவும் லாஸ்லியா தெரிவித்தார் 
 
இந்த நிலையில் லாஸ்லியா தன்னை நாமினேட் செய்ய மாட்டார் என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் தனது பெயரை கூற மாட்டார் என்றும் கஸ்தூரியிடம் சேரன் மிகவும் நம்பிக்கையாக தெரிவித்தார். இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் அப்பா-மகள் பாசத்திற்கு இங்கு இடம் இல்லை, போட்டியை போட்டியாகவே பார்க்க வேண்டும் என்று லாஸ்லியா எடுத்த நாமினேசன் முடிவு பாராட்டத்தக்கது என்று சமூக வலைதள பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்