திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (20:55 IST)

சமூக வலைதளத்தில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்

தமிழ்  சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர்     மாநகரம்,  கைதி,  மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
 
சமீபத்தில் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான படம்  லியோ. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்தது.
 
இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இவரது அடுத்த படம் தலைவர் 171. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  
 
இந்த நிலையில், ஜி ஸ்குவாட் என்ற  தயாரிப்பு  நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ள  நிலையில், இந்த நிறுவனம் மூலம் வெளியான  'ஃபைட் க்ளப் 'சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
இப்படத்தின் ''வரவேற்புக்கு நன்றி'' கூறிய அவர் , நான் சிறிது காலம் சமூக வலைதளம் என் செல்போனில் இருந்து விலகி அடுத்த பட வேலைகளில் முழு கவனம் செலுத்த இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.