1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (00:10 IST)

இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்

mysskin - lokesh
'லியோ' படத்தில் நடித்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படத்திற்கு  பின்னர், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய்   நடித்து வரும் படம்  லியோ.

சமீபத்தில்,  இப்படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில், லியோ படத்தின் தனக்கான காட்சிகளை முடித்துவிட்டு, இயக்குனர் மிஸ்கின் திரும்பினார்.

இதையடுத்து, அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இயக்குனர் லோகேஷ், நடிகர் விஜய் ஆகியோரை பாராட்டி, இப்படம் வெற்றி பெறும் என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று லோகேஷ் கனகரான் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ லியோ பட ஷூட்டிங்கில் உங்களும் நெருங்கிப் பழகியதற்கு நான் அதிர்ஷ்டமுள்ளவனாக உணற்கிறேன்.  நீங்கள் படப்பிடிப்பில் இருந்த நாட்களில் நாங்கள் வெடித்திருந்தோம்! உங்களுக்கு ஒருபோதும் நன்றி கூற முடியாது ஆனால் ஒரு மில்லியன் நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்..