1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (09:04 IST)

ரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. ரஜினியின் நாற்பது வருட திரைவாழ்க்கையில் இதுதான் முதல்முறையாம். எது?
ரஜினி இரு வேடங்களில் நடித்திருக்கும் லிங்கா சென்சார் முடிந்து டிசம்பர் 12 ரிலீஸுக்கு தயாராக உள்ளது. டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள். 
 
ரஜினியின் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் அவரது பிறந்தநாளில் அவர் நடித்த ஒரு படம் வெளியாவது இதுதான் முதல்முறையாம். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
 
ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தலைவரின் பிறந்தநாள் ஒரு கொண்டாட்டம் என்றால் லிங்கா வெளியாவது டபுள் கொண்டாட்டம். இரண்டு லட்டு தின்னப் போகும் அதிர்ஷ்டசாலிகள்.