1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:42 IST)

ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம்- ஜி.வி. பிரகாஷ்

G. V. Prakash Kumar
கத்தாரில் 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை  அறிவித்த  நிலையில்  ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம் என்று ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்

இந்திய போர்க்கப்பலில் பணிபுரிந்த அனுபவம் பெற்று, பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கத்தாரில் உள்ள அல்தஹ்ரா சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி சேவை என்ற தனியார் நிறுவனத்தில்  8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் பணிபுரிந்தனர்.

அவர்கள் வேலை செய்த நிறுவனம் கத்தார் ஆயுதப்படையினருக்கு பயிற்சி அளித்த நிலையில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கைதான இந்தியர்களின் ஜாமின் மனு பல முறை தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும் நம் தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நமது இந்திய அரசு எடுக்கும் அத்துனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம்…

ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.