1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (08:53 IST)

லியோ ஆடியோ லாஞ்ச் இல்ல.. ஆனா வேற சர்ப்ரைஸ்..? – படக்குழுவின் ப்ளான்!

LEO
தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ஆடியோ வெளியீடு விழா நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பதாக தகவல்கள் வெளியானதுடன், அதற்கான ஷெட் ஏற்பாடுகள் குறித்த வீடியோவும் வெளியானது. இந்நிலையில்தான் நேற்று திடீரென பட தயாரிப்பு நிறுவனமான செவன் க்ரீன் ஸ்டுடியோஸ் லியோ ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் அந்த 30ம் தேதி வேறு சில அப்டேட்களை கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி அன்றைய தினம் லியோ படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K