வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (17:46 IST)

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகை !!

டெல்லியில் இன்று 11 வது நாளாக மத்திய அரசின் 3  விவசாயச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா மாநில விவசாயிகள் கடும் குளிரையும் வெயிலையும், பொருட்படுத்தாமல் ’’ டெல்லி சலோ’’என்று  போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்தியாவின் உணவுப்படைவீரர்கள் விவசாயிகள். அவர்களுடைய  அச்சங்களை நீக்கி அரசு அவர்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்தி, அவர்களின் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.#delhichallo #farmers #punjap #utterpradesh #haririyana