திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (17:45 IST)

சைக்கில் ஓட்டும் விஜய் பட நடிகை ! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா புதிதாக சைக்கிள் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தில் சிம்ரம் தோழியாக அறிமுகமானவர் த்ரிஷா. பின்னர் தம் படத்தில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து, கில்லி,  ஆதி, ஆறு,பீமா, மங்காத்தா, 96, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதேபோல் தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தான் புதிதாக வாங்கியுள்ள சைக்கிளை ஓட்டுவதற்குத் தயாராகும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை த்ரிஷா தற்போது, ராங்கி, பொன்னியின் செல்வன், சுகர், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)