Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாவதில் சிக்கல்


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (18:02 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். 

 
 
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ்  இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது.
 
இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இந்த படத்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார். அந்த தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் நிறுவனமும், சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் கடுமையாக முயன்று வருகிறது.
 
கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இப்படத்தின் தடையை திரும்ப பெறவேண்டும் என்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அன்றைய நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே, இன்று வேறு ஒரு நீதிபதியிடம் அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 
அவர் அந்த வழக்கின் தன்மையை பார்த்துவிட்டு இது ஒன்றும் அவரச வழக்கு கிடையாது. இதை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார். எனவே, மொட்ட சிவா கெட்ட சிவா படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :