வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 மே 2022 (16:46 IST)

விஜய் லோகேஷ் கூட்டணியில் ஏற்பட்ட மாற்றம்? இணைந்தாரா உதயநிதி?

விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிக்கும்ம் 66வது திரைப்படத்தை தில்ராஜு தயாரிக்க வம்சி தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் முடிவதற்கு முன்பாகவே விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜும், விஜய் 68 படத்தை அட்லியும் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு சிறுமாற்றம் அதில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் படி அந்த படத்தை உதயநிதி தயாரிக்க, முதல் காப்பி அடிப்படையில் லலித் தயாரிப்பார் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக எல்லா பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களையும் உதயநிதி விநியோகம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.