வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:10 IST)

இரண்டே மாதங்களில் பிரேக்-அப்: என்ன ஆச்சு லலித்-சுஷ்மிதா சென் உறவு?

lalit modi sushmita
தொழிலதிபர் லலித் மற்றும் நடிகை சுஷ்மிதா சென் ஆகிய இருவரும் டேட்டிங் செய்வதாகவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென பிரேக் அப் ஆகி விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் ஐபிஎல் சேர்மன் மற்றும் தொழில் அதிபர் லலித் மோடியும் முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னும் காதல் உறவில் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர் 
 
மேலும் இருவரும் இணைந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன. நாங்கள் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கி உள்ளோம் என்றும் இருவரும் பேட்டிங் செய்து வருகிறோம் என்றும் ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தனர்
 
இந்த நிலையில் திடீரென தற்போது நடிகை சுஷ்மிதாசென் லல்லித உடனான புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார் எனவே இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.