Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உங்களுக்கு எல்லாம் கோவில் சிலை கூட ஆபாசமாகத்தான் தெரியும்; யாரை கூறுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்??


Sugapriya Prakash| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (12:46 IST)
கேவலமான மனநிலை உள்ளவர்களுக்கு, கோவிலில் உள்ள சிலைகள் கூட ஆபாசமாகத்தான் தெரியும் என லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

 
 
சமிபத்தில் “கடவுள் இருக்கான் குமாரு” படத்தில் தனது நிகழ்ச்சியை கிண்டல் அடித்ததால், அதில் நடித்த ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
 
இதற்கிடையில் அதே நிகழ்ச்சி குறித்து நடிகை ஸ்ரீபிரியா காட்டமான கருத்து ஒன்றைச் சொல்ல, அதுவும் பெரும் சர்ச்சையில் முடிந்தது. 
 
இந்நிலையில், அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி தன்னுடைய கண்களை திறந்துள்ளதாக, ரசிகர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டிவீட் செய்துள்ளார்.
 
இதற்கு யாரையோ தாக்குவது போல, லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னுடைய நிகழ்ச்சி குறித்த கண்ணோட்டம் பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. கேவலமான மனது கொண்டவர்களுக்கு, கோவிலுக்குள் இருக்கும் சிலைகளை பார்த்தால் கூட செக்சியாக தெரியும்” என தெரிவித்துள்ளார்.
 
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டிவீட் செய்துள்ள ரசிகர், அதில் நடிகை ஸ்ரீபிரியாவையும், ஆர்.ஜே.பாலாஜியையும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :