இயக்குனரிடம் அதற்கு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும், இல்லையெனில்; லட்சுமி ராமகிருஷ்ணன் அனுபவம்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:15 IST)
திரையுலகில் பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மனம் திறந்து பேசியுள்ளார். 

 
 
பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது குறித்து நடிகைகள் பலரும் ஒவ்வொருவராக முன் வந்து பேசி வருகிறார்கள். 
 
இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, நான் சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து பாலியல் பாகுபாட்டால் கேலிக்கும், கிண்டலுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள்ளேன்.
 
முன்னணி மலையாள இயக்குனர் ஒருவர் (தமிழிலும் படம் எடுத்துள்ளார்) எனக்கு பாலியல் தொல்லைகள் தர முயன்றார். அதை நான் எதிர்த்தபோது படப்பிடிப்பு தளத்தில் என்னை அசிங்கப்படுத்தினார்.
 
படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் என்னை திட்டினார். நான் நன்றாக நடித்தாலும் சில காட்சிகளை 25 டேக் எடுக்க வைத்தார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதால் நான் தான் அவதிப்பட்டேன் என கூறியுள்ளார்.
 
மேலும், அண்மையில் ஒரு இயக்குனர் அனுப்பி வைத்ததாக கூறி அவரின் உதவியாளர் வந்து என்னிடம் கதை சொன்னார். கதை சொல்லும்போதே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசினார். உட்னே அதிர்ந்துபோய் அவரை வெளியே செல்லுமாறு கூறினேன் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :