புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:13 IST)

ஒல்லியான லட்சுமி மேனன்?

நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால், குட்டிபுலி, சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். 
 
ஆனால், இடையில் அவருக்கு திடீரென படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு அவரது உடல் எடை முக்கிய காரணமக கூறப்பட்டது. ரெக்க படத்தில் முந்தைய படங்களைவிட பருமனாகவே காணப்பட்டார். 
 
இதனால், உடல் எடை குறைக்க முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது அவர் கையில் யங் மங் சங் படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடன காட்சி படமாக்கப்பட்டது. 
 
இது குறித்து படக்குழு கூறுகையில், ஸ்லிம்மான புதிய தோற்றத்தில் இதில் லட்சுமி மேனனை காணலாம் என தகவல் வெளியிட்டுள்ளனர்.