லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?

Last Updated: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:36 IST)
'சாணக்ய தந்தரம்' படத்துக்காக லேடி கெட்டப் போட்டிருக்கிறார் உன்னி முகுந்தன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர்கள் பலர் பெண் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். சமீபத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்பில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், 'பாகமதி' உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 
 
நடிகர் உன்னி முகுந்தன் 'சாணக்ய தந்தரம்' என்ற படத்திற்காக பெண் வேடத்தில் நடிக்கிறாராம். இவரின் இந்தப் பெண் தோற்றம் பார்த்த ரசிகர்கள் அடையாளம் காணும் வகையில் இல்லை என்றும், உண்மையில் ஒரு பெண் போலவே இருக்கிறார் என்றும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
'சாணக்ய தந்தரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான  'பாகமதி' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :