Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குற்றம் 23... அருண் விஜய்யை பாராட்டிய ரஜினி

Sasikala| Last Modified வியாழன், 9 மார்ச் 2017 (17:25 IST)
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படத்தை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தனது நெருங்கிய நண்பர் விஜயகுமாரின் மகன் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரஜினியும் பாராட்டியுள்ளார்.

 
குற்றம் 23 படத்தை தனது வீட்டில் பிரத்யேகமாகப் பார்த்த ரஜினி அருண் விஜய்யை தொலைபேசியில் அழைத்து அவரது  நடிப்பையும், கச்சிதமான உடம்பையும், படத்தையும், அதன் கதையையும் பாராட்டியுள்ளார்.
 
இது குறித்து பேசிய அருண் விஜய், நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என்பதாக இருந்தது ரஜினியின் பாராட்டு என கூறியுள்ளார்.  என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த அருண் விஜய் தற்போது நாயகனாகவும் முதல்முறையாக தடம் பதித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :