1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (16:09 IST)

குட்டி தலயின் பெயர் ” ஆத்விக் “ ஆம்

நட்சத்திர தம்பதிகளான அஜித் - ஷாலினியின் 2 ஆவது குழந்தைக்கு ”ஆத்விக்” என்ற பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி அன்று அஜித் - ஷாலினி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தலயின் ரசிகர்கள் அனைவரும் செல்லமாக குழந்தையை ” குட்டி தல “ கூறி வந்தனர். ஏன் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற அஜித் ரசிகர்கள் #KuttyThala என்ற ஹேஷ்டேக்கை  உருவாக்கி அசத்தினர்.
இந்நிலையில் அஜித்தின் 2 ஆவது குழந்தைக்கு ” ஆத்விக் “ என பெயர் சூட்டியிருக்கின்றனர். ஆத்விக் என்ற பெயருக்கு ஆங்கிலத்தில் “ யுனிக் “ என்று அர்த்தமாம் அதாவது தமிழில் தனித்துவம் என்று பொருள்.