1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (15:29 IST)

குற்றம் 23 - மகிமாவின் பரபர நிமிடங்கள்

குற்றம் 23 - மகிமாவின் பரபர நிமிடங்கள்

குற்றம் 23 படத்தில் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மகிமா. அறிவழகன் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது? மகிமாவே சொல்கிறார்.


 
 
"எனக்கு அறிவழகன் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய்யுடன் நடிக்க போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. 
 
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நான் அவரின் நடிப்பிற்கு தீவிர ரசிகையாகி விட்டேன் என்பது தான் உண்மை. அது மட்டுமின்றி தடையற தாக்க படத்தில் அவரின் நடிப்பையும், அற்புதமான நடனத்தையும், அதிரடியான சண்டை காட்சிகளையும் கண்டு நான் பல முறை வியந்தது உண்டு.
 
இந்த படம் எனக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். என்னுடைய தென்றல் கதாப்பாத்திரத்தை நான் அதிக அளவில் காதலிப்பது மட்டுமில்லாமல் அந்த வேடத்தின் உயிராகவே நான் மாறியுள்ளேன்."
 
மாற்றம் முன்னேற்றமாக இருக்கட்டும்.