1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (15:56 IST)

அரசியலில் தோல்வி, தயாரிப்பாளருடன் மோதல் - தலைமறைவான திவ்யா ஸ்பந்தனா

திவ்யா ஸ்பந்தனா என்று முழுப் பெயரைச் சொன்னாலும் குத்து ரம்யா என்பதே தமிழகத்தில் பிரபலம். அவரைதான் இரண்டு மாதமாக காணவில்லை என கர்நாடகா கதறுகிறது. 
 
போஸ்டர் ஒட்டுதல் போன்ற அரசியல் செயல்பாடுகளில் இறங்காமலே மாண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். ஆறு மாதங்களில் அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மண்ணை கவ்வினார். என்னுடைய தோல்விக்கு அதிருப்தி காங்கிரஸ்காரர்கள்தான்.
போஸ்டர் ஒட்டாமல், கோஷம் போடாமல் அரசியலில் பதவி கிடைக்க வேண்டுமென்றhல் நீங்கள் அதிகாரமிக்கவரின் வாரிசாக இருக்க வேண்டும். திவ்யா காங்கிரஸின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி.
 
 காரணம் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
 
தோல்விக்கு முன்புவரை சினிமாவுக்கு முழுக்குப் போட்டு மக்கள் பணி செய்யப் போகிறேன் என்றவர் தோல்வியடைந்ததும் ஆர்யன் என்ற படத்தில் நடித்தார். அடுத்து புனித் ராஜ்குமாருடன் நடிக்க இருந்த போது அப்படத்தின் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு படத்திலிருந்து வெளியேறினார்.
 
அன்றிலிருந்து அம்மணியை எங்கும் காணோம். சதா ட்விட்டரில் கருத்து சொல்பவர் ஆகஸ்டிலிருந்து அங்கேயும் ஆப்சென்ட். திவ்யாவுக்கு என்னானதோ என்று அப்செட்டில் இருக்கிறது சுற்றமும் நட்பும்.