‘கும்கி’ அஸ்வினுக்கு திருமணம்: அமெரிக்காவில் படித்த காதலியை கரம் பிடித்தார்
‘கும்கி’ அஸ்வினுக்கு திருமணம்
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த 'கும்கி' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் அஸ்வின். இவர் பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ’கும்கி’ படத்தில் இவரது கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இவர் ’கும்கி அஸ்வின்’ என்றே கோலிவுட்டில் அழைக்கப்பட்டு வந்தார்
இந்த நிலையில் கும்கி அஸ்வின், வித்யாஸ்ரீ என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்கா சென்று படித்து முடித்தவுடன் திருமணம் என்ற நிபந்தனை விதித்ததால், இத்தனை ஆண்டுகள் அஸ்வின் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்எஸ் படித்து முடித்து விட்டு சென்னை திரும்பிய நிலையில் இவர்களது திருமணம் சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் மிக எளிமையாக அஸ்வின்-வித்யாஸ்ரீ திருமணம் நடந்தது
இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் சார்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விக்ரம் பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் அஸ்வினுக்கு போன் மூலம் வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஸ்வின் வித்யாஸ்ரீ திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது