வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (10:17 IST)

இறந்துவிட்டதாக கே.ஆர்.விஜயா பற்றி வதந்தி

நடிகை கே.ஆர்.விஜயா கேரளா செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்திகளை பரப்பி அவரை அதிர்சி அடைய செய்த நிலையில், "மனசாட்சி இன்றி இப்படி வக்கிரமாக வதந்திகளை பரப்பி நடந்துகொள்பவர்களை என்ன செய்வது , அவர்களை யார் தண்டிப்பது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 


வயதான பிரபலங்கள் தாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்கலுக்கும் அவ்வொப்பது தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லா விட்டால், அவர்களை மறுந்துவிட்டோம் என்பதற்காக அவர்களுடைய இறப்பு செய்தி தான் ஊடகங்களிலும் வெளியாகும். சில ஆர்வ கோலர்கள் மூத்த பிரபலங்களை இறப்பது செய்தி ஆக்கி வதந்திகளை பரப்புவிடுகின்றனர். அப்போது அதைகேட்ட அந்த பிரபலங்களின் மனம் நொந்து நூலகிவிடுகிறது.
 
இதுபோல் தான் நேற்று காலமான ஆச்சி மனோரமா, பல வதந்திகளால் சாகடிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் மூத்த  பத்திரிகையாளர் சோ` குறித்தும் சிலர் வதந்திகளை அவ்வொப்பது வந்துக்கொண்டுதான் உள்ளது. 
 
இன்று காலை முதல்  விபத்தில் சிக்கியிருப்பவர் நடிகை கே.ஆர்.விஜயா. அவர் கேரளா செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாகவும், அவரது உறவினர்கள் உடலை வாங்க மருத்துவமனைக்கு வெளியே காத்திருப்பதாகவும் சில ஆர்வ கோலர்கள் வதந்திகளை கிளப்பினர்.
 
இதனைறிந்த சில ஊடக செய்தியாளர்கள் கேஆர் விஜயாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர், அப்போது "அவர் சிரித்தக்கொண்டே நான் நல்லதான் இருக்கிறேப்பா, `ஏம்பா இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட வாழ்ந்துட்டு, அப்புறமா இறந்துறேன், 19 வயதில் இதேபோல் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகளை பரப்பினர், 3 வருடம் முன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது, ஏபா இப்படி
 
கொஞ்சமும் மனசாட்சி இன்றி இப்படி வக்கிரமாக வதந்திகளை பரப்பி நடந்துகொள்பவர்களை என்ன செய்வது" என்று கூறினார்