வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (12:48 IST)

கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் அஞ்சலி.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள  அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
 
அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் நகைச்சுவை கலைஞர்கள் பல குரல் கலைஞர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். 
 
அதனைத் தொடர்ந்து அவரது உடல் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் உட்பட நண்பர்கள் பல்வேறு கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். 
 
இந்நிலையில் கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.