வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (10:26 IST)

கொரடலா சிவா 'காமசூத்திராவின் தலைவர்' : ஶ்ரீரெட்டி சர்ச்சை

பிரபல தெலுங்கு இயக்குனர் கொரடலா சிவா மீது நடிகை ஶ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


 
இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 
பிரபல தெலுங்கு இயக்குனர் கொரடலா சிவா, சமீபத்தில்  மகேஷ் பாபு உடன் இணைந்து 'பர்த் அனே நேனு ' என்ற வெற்றி படத்தை கொடுத்தவர். இவருடைய படங்களில் மகேஷ் பாபு, கிரா அத்வானி, ஜூனியர் என்டிஆர், சமந்தா, அனுஷ்கா, பிரபாஸ் , அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், தமன்னா, அல்லு அர்ஜுன், சுதீப், நயன்தாரா, காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் மிக பிரபலமான முன்னணி இயக்குனரான கொரட்லா சிவா மீது ஶ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக ஶ்ரீரெட்டி வெளியிட்டு உள்ள பதிவில், என்னை நீங்க மட்டும் பூலான் தேவியா பார்க்குறீங்க... என பதிவிட்டு உள்ளார். சில மணி நேரம் கழித்து வெளியிட்ட பதிவில், நான் தூங்கும் போதும், எழும் போதும் ஒருவரை மட்டும் மறக்க மாட்டேன். அவர் பெயர் கே.எஸ் (கொட்ரலா சிவா), அவர் தான் காமசூத்திராவின் தலைவர் என  கூறியிருந்தார்.



பின்னர் அதனை எடிட் செய்து நான் தூங்கும் போதும், எழும் போதும் ஒருவரை மட்டும் மறக்க மாட்டேன் என மாற்றி விட்டார்.  ஶ்ரீரெட்டியின் இந்த பதிவு தெலுங்கு சினிமாவில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது.