1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (17:00 IST)

கமாண்டர் நடிகரின் நண்பர்கள் அட்டூழியம் - உச்சகட்ட கோபத்தில் இளம் இயக்குனர்!

கோலிவுட்டின் உச்ச நடிகரான அந்த கமாண்டர் நடிகரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. படத்தின் விமர்சனங்களும் எதிர்மறையாக இருந்ததால் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். காரணம் கமாண்டர் நடிகருடன் மோதிய அந்த இளம் ஹீரோவின் படம் 100கோடி வசூல் என்ற இலக்கையும் எட்டி படத்தின் இயக்குனருக்கு பெரும் புகழும் சேர்த்துள்ளது. 
தற்போது அதே இயக்குனர் தான் கமாண்டர் நடிகரை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை தானே தயாரிக்கிறேன் என கூறி அந்த ஹீரோ இயக்குனரை வளைத்துவிட்டார். ஆனால், மிகவும் குறைந்த செலவில் தான் படத்தின் பட்ஜட் அடங்கியுள்ளது. கமாண்டர் நடிகரின் சொந்த படம் என்பதால் தனது 20 ஆண்டுகால நண்பர்களை எல்லாம் படத்தில் நடிக்க வைத்து வருகிறாராம்.  இதனால் படத்தின் கதையில் சில பல மாற்றங்களை செய்தே இயக்குனரின் மண்டை காய்கிறதாம்.   
 
அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தலத்தில் ஹீரோவின் நண்பர்கள் அவ்வளவு அட்டூழியம் செய்து வருகிறார்களாம்.  உதவி இயக்குனர்களை படாதபாடுபடுத்தி வருகிறார்களாம். அவர்களால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்கள் லீக்காகி வருகிறதாம்.  இதை குறித்து கமாண்டர் நடிகரின் காதுக்கு கொண்டு சென்றும் எந்த பலனுமில்லாததால் இயக்குனர் செம்ம கடுப்பில்  இருந்து வருகிறாராம்.