புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 28 ஆகஸ்ட் 2021 (13:07 IST)

கல்யாணம் பண்ணாமல் குழந்தையா...? காதலி நடிகையின் முடிவால் திணறிய இளம் இயக்குனர்!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் அந்த மூன்றெழுத்து நடிகை இளம் இயக்குனர் ஒருவரை  6 வருடமாக காதலித்து வருகிறார். அவரோ திருமணத்திற்காக காதலித்த நாள் முதல் காத்துக்கிடக்கிறார். 
 
நடிகையோ கல்யாணமா? அது எதுக்கு? இப்போவே அப்படி தானே இருக்கோம் என்றவாறு லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாராம். அண்மையில் அந்த நடிகை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதை வெளிப்படையாக கூறியதால் கல்யாணம் எப்போ என்று காதல் இயக்குனர் கேட்க... அதற்கு அந்த நடிகை கல்யாணமா அப்டின்னா? என கேட்டு ஷாக் கொடுத்தாராம். இப்படியே போனால் கல்யாணம் ஆகமலே குழந்தை பெத்துக்குவோம் போலயே... சும்மாவே வச்சு செய்வாங்க அப்படி ஒன்னு நடந்தால் வெளியிலே தலை காட்ட முடியாதே என புலம்பி வருகிறாராம் அந்த இயக்குனர்.