வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (14:29 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

5. ஏபிசிடி 2
இந்திப் படமான ஏபிசிடி 2 சென்ற வார இறுதியில் 13.4 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல், 51.7 லட்சங்கள்.
 

4. ரோமியோ ஜுலியட்
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ரோமியோ ஜுலிய்ட் எதிர்பாராத ஹிட். சென்ற வார இறுதியில் 16.9 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 2.3 கோடியை தனதாக்கியுள்ளது.
 

3. யாகாவாராயினும் நா காக்க
ஆதி நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 25 லட்சங்கள்.
 

2. இன்று நேற்று நாளை
டைம் மெஷினை மையப்படுத்தி தமிழில் வெளிவந்திருக்கும் முதல் படம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 35.15 லட்சங்களை வசூலித்துள்ளது.

 

1. ஜுராஸிக் வேர்ல்ட்
ஜுராஸிக் வேர்ல்ட் இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 39.8 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 2.52 கோடிகள்.