1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (09:15 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

4. நண்பேன்டா
உதயநிதி நடித்துள்ள நண்பேன்டா சென்ற வார இறுதியில் 1.4 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல், 2.34 கோடிகள்.
 

3. கொம்பன்
ஓபனிங் வசூலுடன் கொம்பனின் வசூல் வேட்டை நிறுத்தத்துக்கு வந்தது. சென்ற வார இறுதியில் 1.99 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை 2.89 கோடிகளை தனதாக்கியுள்ளது. இது காக்கி சட்டை, அனேகன் படங்களின் வசூலைவிட குறைவு.

 
 

2. ஓ காதல் கண்மணி
சென்ற வாரம் இருந்த அதே இரண்டாவது இடத்தில் மணிரத்னம் படம். சென்ற வார இறுதியில் இப்படம் 63.5 லட்சங்களை வசூலித்தது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.04 கோடிகள்.

 
 

1. காஞ்சனா 2
சென்ற வாரமிருந்த அதே முதலிடம். சென்ற வார இறுதியில் இந்த பேய் படம் 1.3 கோடியை வசூலித்தது. இதுவரையான சென்னை வசூல் மட்டும் 3.75 கோடிகள்.