1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (14:29 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் காக்கி சட்டை

5. ஐ
ஏழாவது வாரத்திலும் ஐந்தாவது இடத்தில் உள்ளது ஐ. சென்றவார இறுதியில் அரை லட்சத்தை மட்டுமே வசூலித்த படம் இதுவரை சென்னையில் 9.6 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. 2014 -15 -இல் இதுவே அதிகபட்ச வசூல்.
 

4. என்னை அறிந்தால்
அஜீத்துக்கான மூன்று நாள் ஓபனிங்கோடு என்னை அறிந்தாலின் வசூல் வேட்டை நிறுத்தத்துக்கு வந்தது. ஒரு வாரத்துக்குப் பின் சுத்தமாக ஆளேயில்லை. சென்ற வார இறுதியில் இதன் வசூல் வெறும் 2.7 லட்சங்கள். இதுவரை சென்னை வசூல் 5.9 கோடிகள். வேலையில்லா பட்டதாரி வசூலையே படம் இன்னும் எட்டவில்லை.


3. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
 
படத்துக்கு பாஸிடிவான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் சுமாராகவே உள்ளது. சென்ற வார இறுதியில் படத்தின் வசூல் 8.6 லட்சங்கள். இதுவரை 52.4 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 

2. அனேகன்
இரண்டாவது இடத்தில் அனேகன். காக்கி சட்டை வார இறுதியில் வெளியானதால் அனேகனின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 30 லட்சங்கள். இதுவரை சென்னை வசூல் 3.98 கோடிகள்.
 


1. காக்கி சட்டை
எதிர்பார்த்தது போல் முதலிடத்தை காக்கி சட்டை பிடித்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம், முதல் மூன்று தினங்களில் 1.5 கோடியை தனதாக்கியுள்ளது.