1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல இந்த இரண்டே வாய்ப்புதான் இருக்கு... ஆனா நடக்குமா?

நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த இரண்டாவது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிதான் ஆவலோடு பார்த்திருக்கும். ஏனென்றால் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால்தான் மும்பை அடுத்த போட்டியை வெற்றி பெற்று ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும். ஆனால் போட்டியை வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வலுவான ரன்ரேட்(+0.587) புள்ளிகளையும் கொல்கத்தா பெற்றுவிட்டது.

இதனால் மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட பாழாகிவிட்டது. ஏனென்றால் மும்பை அணியின் ரன்ரேட் -0.048 ஆக உள்ளது. இதனால் அடுத்து சன் ரைசர்ஸ் அணியை மிகப்பெரிய மாரிஜினில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப்க்கு செல்ல முடியும். அது என்ன மார்ஜின் என்றால் மும்பை அணி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதே போல இரண்டாவது பேட்டிங் செய்தால் 100 பந்துகளுக்கு மேல் மீதமிருக்க இலக்கை எட்டி இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே நடபப்து மிகவும் கஷ்டம் என்பதால் மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புகள் மிக மிக குறைவு.