1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (13:53 IST)

நாலு லைக்குக்கு, எட்டு ஷேருக்கு கண்டதையும் பேசாதீங்க! பிரபல தயாரிப்பாளர்

நாலு லைக்குக்கு, எட்டு ஷேருக்கு கண்டதையும் பேசாதீங்க!
கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து நாலு லைக்குக்கு, எட்டு ஷேருக்காக கண்டதையும் பேச வேண்டாம் என பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மதத் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முருக பக்தர்கள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கந்தசஷ்டி கவசத்தை அவதூறு செய்தவரை பல திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். தற்போது பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின்  டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: 
 
முருகர் துதி பாடுவோம், 'பெருமாளே'னு துதிப்போம். அதே நேரம், நம்ம பசங்களுக்கு ஒன்னுனா முன்ன வந்து நிக்குறதும் நாங்கதான்டா! #KarupparKoottam - நாலு likeகு, எட்டு shareகு வேண்டி கண்டதையும் பேசாதீங்க! வாழு, வாழ விடு - இதுதான் நம்ம பண்பாடே. அது தெரியாம வந்துட்டானுங்க mic-அ தூக்கிட்டு!