1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:01 IST)

தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தயாரிப்பாளர் தாணு தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46 ஆவது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி கவனத்தில் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை விஜய் கார்த்திகேயா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக தற்போது மாமல்லபுரத்தில் போலீஸ் ஸ்டேஷன் செட் ஒன்று அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட காட்சிகள் அடுத்து புதுச்சேரியில் நடக்க உள்ளதாக படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.