சூர்யாவை மிரட்டவரும் கே.ஜி.எஃப் வில்லன் - எதிர்பார்ப்பை எகிறடிக்கும் "கங்குவா"
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்று வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
“கங்குவா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலுக்கு அருகே உள்ள அடர் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது கே. ஜி. எஃப் படத்தின் வில்லன் நடிகர் பி.எஸ்.அவினாஷ் கங்குவா படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.