திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:58 IST)

கேஜிஎப் 2 முன்பதிவே இத்தனை லட்சம் டிக்கெட்டா? Book my show வெளியிட்ட புள்ளிவிவரம்!

கேஜிஎப் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று திரைப்படம் உலகம் முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கேஜிஎப் 2 இத்தனை திரைகளில் ரிலீஸாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தும் இந்த படத்துக்கு 350 திரைகள் வரை மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் நேற்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகளவில் வெளியாகி இருந்தது. இதையடுத்து இப்போது கேஜிஎப் 2 வுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகள் நாளையில் இருந்து ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படம் முன்பதிவில் இதுவரை எந்த ஒரு படமும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளது. புக் மை ஷோவில் மட்டும் 2.9 (29 லட்சம்) மில்லியன் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னர் எந்தவொரு படத்துக்கும் டிக்கெட் முன்பதிவு நடந்ததில்லை என சொல்லப்படுகிறது.