திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (21:53 IST)

கேஜிஎஃப் -2 பட ஆடியோ உரிமை பல கோடிக்கு விற்பனை !

கே.ஜி.எஃப்-2 படத்தின் ஆடியோ உரிமையை பிரபல மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ராம் என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பிரசாந்த் நீல்ஸ்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப்  சேப்டர் 1 என்ற படத்தை நடிகர் யாஷ்-ஐ வைத்து இயக்கினார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்க் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டர்  2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் எனத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், கேஜிஎஃப் பட பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியோ 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.  

இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினரும் லஹரி ஆடியோ உரிமை பெற்ற ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.