கேரளா… கடவுளின் தேசமா? நடிகைகளின் தேசமா?


cauveri manickam| Last Modified சனி, 17 ஜூன் 2017 (14:02 IST)
கேரளாவில் இருந்து மட்டும் புதிது புதிதாக நடிகைகள் எப்படித்தான் உருவாகிறார்களோ என்று தெரியவில்லை.

 


‘கடவுளின் தேசம்’ என்று கேரளாவைச் சொல்வதைவிட, ‘நடிகைகளின் தேசம்’ என்று சொல்லிவிடலாம். அங்கு மட்டும் எப்படித்தான் நடிகைகள் உருவாகிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார் ரகுமான். ஹீரோ தொடங்கி, வில்லன், அப்பா என அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘துருவங்கள் 16’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தன்னுடைய மகளையும் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார்.

இவருடைய மூத்த மகளான ருஷ்தா, எம்.பி.ஏ. முடித்தவர். சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற அவருடைய ஆசைக்கு பச்சைக்கொடி காட்டிய ரகுமான், மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அவரை அறிமுகப்படுத்த இருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான தெலுங்கு நடிகர் ராஜசேகர் – ஜீவிதா ஆகியோரின் மகளான ஷிவானி, பிரபு சாலமன் இயக்கவுள்ள ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :