கேரளா எல்லைப் பகுதியில் பைரவா படத்துக்கு திருவிழா கூட்டம்

Sasikala| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (13:20 IST)
கேரளாவில் நடந்துவரும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக பைரவா பட வெளியீட்டில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

 
உதாரணமாக, திருவனந்தபுரம் அருகில் தமிழக பகுதிகளான களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம் ஆகிய  பகுதிகளில் பைரவா திரையிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகள்.

பொதுவாக  இத்தனை திரையரங்குகளில் படம் வெளியானால் கூட்டம் குறைவாக இருக்கும். கேரளாவில் பட வெளியீட்டில் சிக்கல்  ஏற்பட்டதால் இந்தப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
 
இந்த கூட்டம் நீடித்தால் முதல்வாரத்திலேயே அனைத்து திரையரங்குகளும் போட்ட பணத்தை எடுத்துவிடும் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :