வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:55 IST)

கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷின் மழுப்பல் பதில்!

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷிடம் ஒரு ரசிகர் எப்போது கல்யாணம் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதிலளித்த கீர்த்தி, “நல்ல மாப்பிள்ளையாக கிடைத்தால் கண்டிப்பாக செய்துகொள்வேன்” எனக் கூறியுள்ளார்.