கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு "பெண்குயின்" பரிசு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

Papiksha| Last Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (14:50 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்துவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். 


 
அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்  தயாரிக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடிக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். 
 
கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில்  பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷின் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டில் ( பெண்குயின் )மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :