Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விரைவில் தல அஜீத்துடன் நடிப்பேன் - கீர்த்தி சுரேஷ் பேட்டி


Murugan| Last Modified ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (19:06 IST)
விரைவில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

 
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சேலத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவிற்கு வந்தார். அப்போது அங்கு அவரை காண ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:
 
இப்போதுதான் முதல் முறையாக நான் சேலத்திற்கு வந்துள்ளேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பைரவா படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்தேன். விரைவில் அஜீத்துடன் நடிப்பேன். அதேபோல், சூர்யாவுடன் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பின் விஷாலுடன் சண்டக்கோழி 2-வில் நடிக்கிறேன்” என அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :