புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (18:53 IST)

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.



அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2  வெளியாக உள்ளது. நவம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்க்கு ஸ்பெஷல் மாதமாகும். விஜய்யுடன் நடித்த சர்கார் வெளியாக உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுந்தர் சியின் படத்துக்கு பின் சிம்பு இந்த படத்தில் நடிக்க உள்ளார்.