1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (19:01 IST)

சூர்யாவுடன் மோதும் கீர்த்தி சுரேஷ்: பரபரப்பு தகவல்

சூர்யாவுடன் மோதும் கீர்த்தி சுரேஷ்: பரபரப்பு தகவல்
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இதற்கு அடுத்த வாரம் ஏப்ரல் 16-ஆம் தேதி சூர்யாவின் ’சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் ஏற்கனவே ‘மாஸ்டர்’ படத்துடன் வெளியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ ரிலீஸ் ஆகும் மறுநாள் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நான்குமொழி திரைப்படமான ’மிஸ் இந்தியா’ தென்னிந்தியா முழுவதும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக சற்றுமுஞ் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சூர்யா படத்துடன் கீர்த்தி சுரேஷ் படம் மோத உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நரேந்திர நாத் இயக்கியுள்ள மிஸ் இந்தியா ‘படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கீர்த்திசுரேஷ், ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கீர்த்திசுரேஷின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.